ADDED : செப் 25, 2024 01:27 AM
ஆட்டோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 25-
ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், துணை தலைவர் முருகையா, சாலை போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் கனகராஜ் பேசினர்.
ஆட்டோ, கார், சரக்கு வாகனங்கள் மீது ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மாவட்டம் மாறினாலும், நகர பஸ்கள் இயக்கும் துாரமான, 30 கி.மீ., என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி அடமானத்துக்கு பறிமுதலான ஆட்டோக்கள் பெயர் மாற்ற, ஆட்டோ வாங்கியவர் ஆதார் அட்டை சரி பார்த்தால் மட்டும் போதும் என உறுதி செய்ய வேண்டும். ஆட்டோ ஸ்டாண்ட்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் புதிவு செய்துள்ள ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு, 2 ஜோடி சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.