/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை நலன் பேணி காக்கும் நிறுவனங்களுக்கு விருது
/
குழந்தை நலன் பேணி காக்கும் நிறுவனங்களுக்கு விருது
ADDED : ஜூலை 31, 2025 01:53 AM
ஈரோடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணி காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு, 'முன்மாதிரியான சேவை விருதுகள்', 4 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.
அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், என்.ஜி.ஓ., மூலம் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள், சட்டத்துக்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கான குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் என, 4 பிரிவுக்கும் தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். தகுதியான நிறுவனங்கள், இவ்விருது பெற, 'மாவட்ட குழந்தை
கள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டடம், 6 வது தளம், ஈரோடு' என்ற முகவரியில் நேரில் அல்லது தபால் மூலம்
விண்ணப்பிக்கலாம்.

