ADDED : டிச 13, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், டிச. 13-
தாராபுரத்தை அடுத்த நஞ்சியம்பாளையத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமை
வகித்தார்.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுதா, அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மண்டோதரி ஆகியோர், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும் விளக்கினர். வழக்கறிஞர்கள் சகுந்தலா, சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர்.

