ADDED : ஆக 08, 2025 01:06 AM
அ நிறம் | அளவு
கோபி, வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த, மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம் கோபியில் நேற்று நடந்தது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி முகாமை துவக்கி வைத்து, 35.70 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், கோபி நகர செயலாளர் நாகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
