ADDED : செப் 04, 2026 06:15 AM

ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு
சார்பில், 'எச்.ஐ.வி., - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
மற்றும் கலை நிகழ்ச்சி' நடந்தது. கலெக்டர் கந்தசாமி, மனித சங்கிலி
மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்வையொட்டி
ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டது. மாணவ, மாணவியர் தயாரித்த விழிப்புணர்வு ஓவியம்
பார்வைக்கு வைக்கப்பட்டது. சிறந்த ஓவியத்துக்கு பரிசு
வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விழிப்புணர்வு மற்றும்
'பிரேக் பிரீ' செயலியின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்வில்
மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, சி.இ.ஓ., மான்விழி, துணை இயக்குனர்
(குடும்ப நலன்) கோபாலகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு
மாவட்ட திட்ட அலுவலர் துரைசாமி உட்பட பலர்
பங்கேற்றனர்.
