நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழி்ப்புணர்வு பேரணி
சத்தியமங்கலம் சத்தியமங்கலம் அரசு கல்லுாரியின், நாட்டுநலப்பணிதிட்ட மாணவர்கள், வருவாய் துறையினர் இணைந்து, தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் நேற்று ஈடுபட்டனர். கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் ராஜசேகர் துவக்கி வைத்தார். கல்லுாரியில் தொடங்கிய பேரணி, கொமராபாளையம் ஊராட்சி மன்றத்தில் முடிந்தது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தி, கல்லுாரி மாணவர், வருவாய் துறையினர் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

