ADDED : ஏப் 17, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
அந்தியூர் :ஈரோடு மாவட்டம் பர்கூர்மலையில் உள்ள துருசனாம்பாளையயத்தில், பர்கூர் வனத்துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெள்ளித்திருப்பூர் காவல்துறை சார்பில், கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், செந்தில்குமார் துவக்கி வைத்தனர். இதில் ஆந்திரா, கர்நாடக சிறப்பு காவல்படை மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் என, 70 பேர் கலந்து கொண்டனர்.
