நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக், புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.மேயர் நாகராத்தினம் தலைமை வகித்தார். கமிஷனர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தார். முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், புகையிலை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் துவங்கிய பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், செவிலியர், மாநகராட்சி ஊழியர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகைள ஏந்தி சென்றனர். அண்ணமார் பெட்ரோல் பங்க்கில் பேரணி தொடங்கி, மூலப்பாளையம் வழியாக ஜேசீஸ் பள்ளி அருகில் நிறைவடைந்தது

