நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயத்தில் வட்ட சட்டபணிகள் குழு மற்றும் காங்கேயம் தனியார் பொறியியல் கல்லுாரி சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி துவக்கி வைத்தார்.
குற்றவியல் நடுவர் தேன்மொழி போதைப்பொருள் பற்றிய தீமைகளை எடுத்து கூறினார். காங்கேயம் பிரதான சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. வழக்கறிஞர்கள், கல்லுாரி மாணவர்கள், போலீசார் என, 140க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.