ADDED : ஏப் 18, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
தாராபுரம் :சட்டசபை தேர்தலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தாராபுரம்-கரூர் சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ, மாணவியர் நேற்று சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
உப்புத்துறை பாளையம், பைவ் கார்னர், அமராவதி சிலை வழியாக, 6 கி.மீ., கடந்து தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் பேரணி நிறைவடைந்தது. அங்கு மாணவ, மாணவியர் பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
