/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நா.த.க., சீமானுக்கு கண்டனம்
/
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நா.த.க., சீமானுக்கு கண்டனம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நா.த.க., சீமானுக்கு கண்டனம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நா.த.க., சீமானுக்கு கண்டனம்
ADDED : நவ 04, 2024 04:54 AM
புன்செய்புளியம்பட்டி: பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா-வது: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இரு நாட்களுக்கு முன், மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர், வீரமங்கை வேலு நாச்சியார், மாவீரன் அழகுமுத்துக்கோன் உட்பட்ட சரித்திர நாயகர்களை, தான் அடையாளம் காட்டித்தான் மக்களுக்கு தெரியும் என்றும், இல்லையேல் இவர்களை யாருக்கும் தெரியாது என்றும் பேசி-யுள்ளார்.
அவரது பேச்சை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்ப-டுத்தப்பட்ட சமுதாயங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்-கிறது. எங்கள் சமுதாய சரித்திர புருஷர்களை, நெஞ்சில் வைத்து நேசிக்கிறோம், பூஜிக்கிறோம். அரசியலுக்காக அவர்களை பயன்-படுத்தியது கிடையாது. மேலும் எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய மனப்பான்மையுடன், அவர்களை உரிமை கொண்-டாடியதும் கிடையாது. எல்லா மக்களுக்கும் பொதுவான, இந்திய நாட்டின் வீர வரலாற்றின் அடையாளமாக திகழ்பவர்களை, சீமான் உட்பட யாரும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடி-யாது. நாங்கள் பூஜிக்கின்ற சரித்திர மங்கை, வீர புருஷர்களை அசிங்கப்படுத்தினால், அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்-பட்ட தீவிர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.