/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்
/
இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்
ADDED : பிப் 01, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே ஒத்தக்குதிரையில், சாலையோரத்தில், ஒரு மாருதி வேன், சரக்கு ஆட்டோ நேற்று மாலை, 5:30 மணிக்கு நின்றிருந்தது. அப்போது கோபியை நோக்கி அதிவேகமாக சென்ற, டிரெய்லருடன் கூடிய டிராக்டர், சரக்கு ஆட்டோ மற்றும் வேன் மீது மோதியது.
இதில் சரக்கு ஆட்டோ சுவர் மீது மோதியும், மாருதி வேன் கவிழ்ந்தும் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்துக்கு காரணமான ஆப்பக்-கூடலை சேர்ந்த டிரைவர் அருணை, 40, பிடித்து சென்றனர்.