ADDED : மார் 23, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட பேக்கரி கடைக்-காரரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பெரிய வலசில் உள்ள ஒரு பேக்கரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா), விற்பனை செய்யப்படுவதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் 95 விமல் பாக்கெட், 17 கூல் லீப் பாக்கெட், 30 பாக்கெட் புகையிலை விற்ப-னைக்கு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான சரவணனை கைது செய்தனர்.
