/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பலுான் டெக்கரேட்டர் அறிமுக கூட்டம்
/
பலுான் டெக்கரேட்டர் அறிமுக கூட்டம்
ADDED : டிச 03, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு பலுான் டெக்கரேட்டர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட
செயலாளர் அப்துல் வரவேற்றார். மாநில தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.பலுான் டெக்கரேட்டர் தொழிலை, சிறு தொழிலாக அங்கீகரித்து, எங்களுக்கும்
வாரியம் அமைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அரசு சார்பில் வங்கி மூலம்
கடனுதவி, மானிய திட்-டங்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு
தீர்-மானங்களை நிறைவேற்றினர். திருப்பூர், கரூர், சேலம், மதுரை உட்பட பல்வேறு
மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அனைத்து மாவட்டத்துக்கும்
நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்-யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.