ADDED : ஆக 02, 2026 06:56 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்,
வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை, வாழைத்தார் ஏலம், வியாழன்
பாக்கு ஏலம், வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது.
இந்நிலையில்
கொண்டையம்பாளையம் சமுதாய நலக்கூடத்தில், முதன் முறையாக வரும்
ஆக.,4ல், மதியம் 2:00 மணிக்கு வாழைத்தார் ஏலம் துவங்குகிறது.
அதையடுத்து, ஆக.,11ல் காலையில் தேங்காய் ஏலம், மதியம் பாக்கு ஏலமும்
துவங்குகிறது. வரும் வாரங்களில் இந்த ஏலம் தொடரும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
