நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானையால் வாழை சேதம்
டி.என்.பாளையம், நவ. 27--
டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம் மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை, நேற்று அதிகாலை வாழை தோட்டத்தில் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. யானையால் இப்பகுதியில் அவ்வப்போது பயிர் சேதம் ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

