ADDED : நவ 14, 2024 07:22 AM
ஈரோடு: முகூர்த்தம் அடுத்தடுத்து வருவதால், ஈரோடு மார்க்கெட்டில், 100 வாழை இலை கொண்ட ஒரு கட்டு, 600 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: சத்தி, அத்தாணி, கோபி, அந்தியூர், சென்னம்பட்டி, கணபதிபாளையம், வைரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வாழை சாகுபடி அதிகம் நடக்-கிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களை கணக்கிட்டு இப்பகுதி விவ-சாயிகள் வாழை பயிரிடுகின்றனர். சில நாட்களுக்கு முன் வரை, 100 இலை கொண்ட ஒரு கட்டு வாழை இலை, 600 ரூபாய்க்கு விற்ற நிலையில், முகூர்த்த தினம் அடுத்தடுத்து வருவதால் விலை
உயர்ந்துள்ளது. சாப்பாடு இலை, 5 ரூபாயிலிருந்து 7 ரூபாய்; டிபன் இலை 2 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக உயர்ந்துள்-ளது. 100 இலை கொண்ட ஒரு கட்டு இலை, 600 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு
கூறினர்.

