/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழை இலை வியாபாரிகள் சங்க அமைப்பு கூட்டம்
/
வாழை இலை வியாபாரிகள் சங்க அமைப்பு கூட்டம்
ADDED : ஜன 04, 2025 01:59 AM
வாழை இலை வியாபாரிகள்
சங்க அமைப்பு கூட்டம்
பவானி, ஜன. 4-
பவானி அருகே ஜம்பையை அடுத்த ஒரிச்சேரியில், வாழையிலை வியாபாரிகள் சங்க அமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் தனபால் வரவேற்றார். செயலாளர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பவானி தாலுகா கம்யூ., செயலாளர் மாணிக்கம் பேசினார். வியாபாரிகளிடம் ஒப்பந்தம் மூலம் இலை வியாபாரம் செய்வது, வேறு மாவட்டங்களுக்கு இலைகளை கொண்டு செல்லும்போது அதனால் ஏற்படும் இழப்பு உள்ளிட்டவைகளுக்கு சங்கம் மூலம் தீர்வு காண்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். சங்க பொது செயலாளர் ஜெகநாதன், கார்த்தி, தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

