/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.11.77 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
/
ரூ.11.77 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
ADDED : நவ 24, 2025 04:31 AM
கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 40 ரூபாய், நேந்திரன், 31 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 840, தேன்வாழை, 460, பூவன், 310, ரஸ்தாளி, 540, மொந்தன், 300, ரொபஸ்டா, 470, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,550 வாழைத்தார்கள், 7.63 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு, 2,050 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார் 160-780 ரூபாய், தேன்வாழை 60-400; பூவன் 40-350; ரஸ்தாளி, 240-650; மொந்தன், 70-250; ஜி-9, 180-320; பச்சை நாடன், 320-500 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 24-40 ரூபாய், நேந்திரன், 12-28 ரூபாய் என, 4.14 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

