ADDED : ஜன 10, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒருவர், இந்திய அரசின் உரிய அனுமதி பெறாமல், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தங்கி வேலை செய்து வருவதாக, சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விளக்கேத்தி, உச்சிமேடு, பாலாஜி காயர்ஸ் நார்மில்லில் வேலை செய்து வந்த, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அபுல் பாஷர் சனா, 45, என்பவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மில்லில் ஏழு ஆண்டாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. முன்னதாக அபுல் பாஷர் ஷேக் பெயரில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏழு ஆண்டு வசித்து, ஆதார் கார்டு பெற்றதும் தெரிய வந்தது. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முறையான விசா ஏதுமின்றி இந்தியாவில் தங்கியிருந்ததாக, சிவகிரி போலீசார் கைது செய்தனர்.

