ADDED : மார் 24, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா எதிரில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையம், அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு வருபவர்கள், தங்களின் டூவீலர்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக ஆய்வு செய்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறி, வாகனங்களை ரோட்டில் நிறுத்தக்கூடாது என வாகன உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் வங்கி எதிரில் மூன்று பேரி கார்டுகள் வைத்து தடுப்பு அமைத்தனர். வங்கி மற்றும் கடைகளுக்கு வருபவர்கள், தடுப்புக்கு உள்ளே பைக்குகளை நிறுத்த வேண்டும். மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.