/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் தாலுகா ஆபீசை முற்றுகையிட்டுபி.ஏ.பி., விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : ஏப் 23, 2025 01:26 AM
காங்கேயம்:வெள்ளகோவில் பி.ஏ.பி., வாய்க்காவில் நீர் திருட்டை தடுக்க கோரியும், கடைமடைக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தை, முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தை நேற்று காலை, 11:30 மணிய ளவில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போரட்டத்தை துவங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது வாய்க்காலில், 4.5 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீராக சென்று சேர வில்லை, எனவே, 4.8 அடி ஆக உயர்த்தும் பட்சத்தில் அனைத்து பாசன பகுதிக்கும் நீர் சமமாக சென்று சேரும். இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பங்கிட்டு நீர் முழுமையாக திறந்து விடப்பட்டது என கூறுகின்றனர். இதனால் காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில், 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நீரை பெற்றுதர வேண்டும். இவ்வாறு கூறினர். போராட்டத்தால் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில், தாசில்தார் அலுவலக முன் பகுதியில், போலீசார் தங்களக்கு அரசு வழங்கிய வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த மக்கள் சிரமப்பட்டனர். பலர் திரும்பி சென்றனர்.