ADDED : ஏப் 03, 2026 03:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுார் தாலுகா, கொள்ளேகால் - செல்லம்பாளையம் சாலையில் ராமபுரா - நால் ரோடு வரை சாலை புனரமைப்பு பணி நடக்க உள்ளது. இதனால் வரும், 5ம் தேதி முதல், 16ம் தேதி வரை கனரக வாகனங்களை (6 சக்கரங்களுக்கு அதிகமான டிரக்) தற்காலிகமாக அனுமதிக்க வேண்டாம், என சாம்ராஜ் நகர் துணை ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.
இதனால், 5ம் தேதி மாலை முதல், 16ம் தேதி வரை ஆறு சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், பர்கூர் வழியாக கொள்ளேகால் செல்ல தற்காலிக தடை செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சத்தி-திம்பம்-ஹாசனுார்-புன்ஜனுார் வழியாக சாம்ராஜ் நகர்; சத்தி-திம்பம் -அர்த்தநாரியாபுரா-லோகனஹள்ளி- புன்ஜனுார் வழியாக ஹனுாருக்கு மாற்றுப்பாதையில் செல்ல, ஈரோடு கலெக்டர் கந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.
