/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்தி ஊர்வலத்தில் தடியடி:மறியலால் நள்ளிரவில் பரபரப்பு
/
சதுர்த்தி ஊர்வலத்தில் தடியடி:மறியலால் நள்ளிரவில் பரபரப்பு
சதுர்த்தி ஊர்வலத்தில் தடியடி:மறியலால் நள்ளிரவில் பரபரப்பு
சதுர்த்தி ஊர்வலத்தில் தடியடி:மறியலால் நள்ளிரவில் பரபரப்பு
ADDED : செப் 02, 2025 01:04 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியில் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று முன் தினம் இரவு பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் கரைப்பதற்காக, போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டன.
எஸ்.ஆர்.டி., நகர் அருகே நள்ளிரவு, 11:௦௦ மணியளவில் சென்றபோது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் போலீசாரை கண்டித்து விநாயகர் சிலையை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் நீடித்த நிலையில் எஸ்.பி., சுஜாதா பேச்சுவார்த்தைக்கு வந்தார். எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறவே, அதிகாலை, 2:00 மணி அளவில் மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து பவானி ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் புன்செய்புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.