/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் ரூ.700 கோடி விரயம் பயனாளிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
/
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் ரூ.700 கோடி விரயம் பயனாளிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் ரூ.700 கோடி விரயம் பயனாளிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் ரூ.700 கோடி விரயம் பயனாளிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
ADDED : ஆக 08, 2025 01:07 AM
ஈரோடு, கீழ்பவானி கால்வாய் மறுசீரமைப்புக்கு, 700 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது, என, பாசன பயனாளிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில், கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலர் நைனாமலை, பொருளாளர் செல்வமணி, சண்முகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் அரசாணை, விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும் பின்பற்றப்படவில்லை. நீர்வளத்துறை தனது விருப்பு, வெறுப்பு, ஆதாய அடிப்படையில் செயல்படுகிறது. இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 2026 சட்டசபை தேர்தலில் பாசனம் பெறும், 10 தொகுதிகளில் பாசன பயனாளிகளை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளோம். இத்தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம்.
கீழ்பவானி பாசனம் நடைமுறைக்கு வந்து, 70 ஆண்டுகளாகிறது. கரைகளில் கொட்டப்பட்ட மண் வலுவிழந்துள்ளது. கால்வாயை மறுசீரமைப்பு செய்ய, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாசன பயனாளிகள் எதிர்ப்புக்கு இடையே, ஆங்காங்கு கால்வாயில் அவசர கதியில் வேலை நடந்தது. பழைய கட்டுமானத்தில் வரும் நீர் கசிவை, நிறுத்த வேண்டும் என்பதற்காக, ஒட்டு மொத்த கட்டுமானத்தை சில இடங்களில் சீரமைத்தனர். ஆனாலும் நீர் கசிவு பல இடங்களில் தொடர்கிறது.
துார்வாருகிறோம் என்ற பெயரில் கால்வாய்க்குள் உழவு செய்துள்ளனர். அணை கட்டிய காலத்தில் கால்வாய்களை வெட்டி, நில எடுப்பு செய்ய, 10.50 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. இன்று மறுசீரமைப்புக்கு, 700 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக, விரயமாக செலவிடப்பட்ட இத்தொகை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.