/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலையம்பாளையத்துக்கு சிறந்த போலீஸ் ஸ்டேஷன் விருது
/
மலையம்பாளையத்துக்கு சிறந்த போலீஸ் ஸ்டேஷன் விருது
ADDED : ஜூலை 25, 2024 01:46 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மலையம்பாளையம் ஸ்டேஷன், சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் துாய்மை, வழக்குகளை சட்ட ரீதியாக முடித்து வைத்தல், பதிவேடுகள் பராமரிப்பு, குற்ற செயல்களை குறைத்தல், குற்றவாளிகள் கைது நடவடிக்கை, சார்ஜ் ஷீட் தயார் செய்து சமர்பித்தல் உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு, சிறந்து போலீஸ் ஸ்டேஷனுக்கான பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த, 2022ம் ஆண்டில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான ஆய்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள் தகுதி போட்டியில் பங்கேற்றன. இறு-தியில், பெருந்துறை சப்-டிவிசன் மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான பரிசை பெற்றது.
சென்னையில் நேற்று முன்தினம் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் இந்த பரிசை வழங்கினார். இதை மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தன் பெற்று கொண்டார். நேற்று அவர், ஈரோடு எஸ்.பி., ஜவகரை சந்தித்து பாராட்டு பெற்றார்.