ADDED : ஜூன் 09, 2026 02:05 AM
ஈரோடு; ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) ஆட்சி மன்றக்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. பொது செயலர் ரவிசந்-திரன் அறிக்கை படித்தார். பொருளாளர் முருகா-னந்தம், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
ஈரோட்டில் மஞ்சள் உள்ளிட்ட விளைபொருட்-களின் தரத்தை பரிசோதித்து, ஏற்றுமதி செய்ய உதவும் வகையில், வேளாண் பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் விளை பொருளுக்கு செஸ் வரி, சந்தை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழலை மேம்ப-டுத்த ஈரோட்டில் சேகரமாகும் சாய, சலவை, தோல் உள்ளிட்ட பல்வேறு ஆலை கழிவு நீரை, கடலில் கலக்கும் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஈரோட்டுடன், கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், கோவை போன்ற, 14 மாவட்-டங்களை இணைத்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றினர்.
