தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் அணை 58 அடியை எட்டியது

பவானிசாகர் அணை 58 அடியை எட்டியது

பவானிசாகர் அணை 58 அடியை எட்டியது


ADDED : ஆக 06, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணைக்கு, நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம், 58 அடியை எட்டியதுஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி மலை பகுதியில், கடந்த ஜூனில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில், சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லுார் அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, பில்லுார் அணைக்கு வரும் நீர், அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் பவானிசாகர் அணைக்கு வரத்துவங்கியுள்ளது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று, 58 அடியாக உயர்ந்தது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 2,619 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 58.07 அடி; நீர் இருப்பு 6.6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு 750 கன அடி, குடிநீர் தேவைக்காக, 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி என மொத்தம், 855 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us