தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் நீர்வரத்து 53 கன அடியாக சரிவு

பவானிசாகர் நீர்வரத்து 53 கன அடியாக சரிவு

பவானிசாகர் நீர்வரத்து 53 கன அடியாக சரிவு


ADDED : ஜூலை 02, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர் பிடிப்பு பகுதிகளில், போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 98 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 53 கன அடியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 53.33 அடியாகவும், நீர் இருப்பு, 5.2 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.

அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 450 கன அடி நீர் மற்றும் குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என மொத்தம், 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பை விட, நீர் வரத்து குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்தாண்டு இதே நாளில், பவானிசாகர் அணை நீர்மட்டம், 94 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us