/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 66 அடியை எட்டியது
/
பவானிசாகர் நீர்மட்டம் 66 அடியை எட்டியது
ADDED : ஜூலை 03, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்:பவானிசாகர்
அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு
நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் கோவை மாவட்டம் பில்லுார் அணை
நிரம்பி பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரும் அணைக்கு வரத்தாகிறது.
இதனால் நேற்று மாலை அணை நீர்வரத்து, 4,157 கன அடியாக இருந்தது.
அதேசமயம் அணை நீர்மட்டம், 66.45 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து
அதிகரித்து அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால், பாசன பகுதி
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.