/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 96 அடியாக உயர்வு
/
பவானிசாகர் நீர்மட்டம் 96 அடியாக உயர்வு
ADDED : நவ 09, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர் நீர்மட்டம்96 அடியாக உயர்வு
புன்செய் புளியம்பட்டி, நவ. 9-
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில், பரவலாக மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 3,741 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5,689 கன அடியாக நேற்று அதிகரித்தது. கீழ்பவானி வாய்க்காலில், 1,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம், 96 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 25.6 டி.எம்.சி.,யாக இருந்தது.