தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பூவன் வாழைத்தார் ரூ.1,000க்கு விற்பனை

பூவன் வாழைத்தார் ரூ.1,000க்கு விற்பனை

பூவன் வாழைத்தார் ரூ.1,000க்கு விற்பனை


ADDED : ஜன 15, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புன்செய் புளியம்பட்-டியில் பூவன் ரக வாழைத்தார்கள் நான்கு மடங்கு விலை உயர்ந்து விற்பனையானது.

புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, வாழை தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக, பனிப்பொ-ழிவு காரணமாக வாழைத்தார்களின் வரத்து மந்தமாக உள்ளது. இந்நிலையில் போகி மற்றும் பொங்கல் பண்டிகைக்காக வாழை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நேற்று, 100க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.பூவன் ரக வாழைத்தார் ஒன்று, 800 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நான்கு மடங்கு விலை உயர்ந்து, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கூறுகையில், 'பூவன் ரக வாழைத்தார், 15 முதல் 25 கிலோ வரை எடை கிடைக்கும். ஒரு தாரில், 140 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். இந்த வாரம் தொடர்ச்சியாக பண்டி-கைகள் வருவதால் பூவன் ரக தார், 800 முதல் 1,000 ரூபாய் வரை விற்றது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us