ADDED : ஜூன் 25, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
பீகார்,
ஒடிசா மாநில வாலிபர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணிக்கு பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக பீகார்
வாலிபர்களிடையே கடந்த, 23 காலை தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும்
தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி கொண்டனர். அங்கிருந்தவர்கள் இரு
தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
ஈரோடு டவுன் போலீசார் விசாரணை
நடத்தி, பீகார் மாநிலம் ஜார்வாட்டை சேர்ந்த முகமது கபூர், 40, அவரது,
16 வயது மகனை தாக்கியதாக, பீகார் மாநிலம் முசினியைசேர்ந்த பிட்டு,
30, என்பவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
