ADDED : மே 11, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ரயில்வே ஸ்டேஷன் அருகே, பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில்,
சந்தேகத்துக்கு இடமான வகையில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர்
நின்றிருந்தார். ஈரோடு மதுவிலக்கு போலீசார் வாலிபரிடம் சோதனை
செய்தனர்.
இதில், 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,200 கிராம்
கஞ்சா, 1,300 கிராம் மதிப்பிலான கஞ்சா சாக்லெட் இருந்தது. இதன் மதிப்பு,
65 ஆயிரம் ரூபாய். கஞ்சா, கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்து கைது
செய்தனர். விசாரணையில் பீகார் மாநிலம் பாட்னா நாலந்தா மாவட்டத்தை
சேர்ந்த அஜித்குமார், 20, என தெரியவந்தது.
