ADDED : ஜன 10, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பெருந்துறை அருகே பட்டக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணமூர்த்தி, 45; கூலி தொழிலாளி; நண்பரான பெருந்துறையை சேர்ந்த தங்கராஜ், 48 இருவரும் டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், கவுந்தப்பாடி அருகே பெத்தாம்பாளையம் சாலையில் சென்றனர். சீனாபுரத்தை சேர்ந்த சேகர், 40, ஓட்டி வந்த ஹீரோ ேஹாண்டா பைக் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சரவணமூர்த்தி இறந்தார். தங்கராஜ் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

