ADDED : ஆக 08, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த பிரகாஷ் மகன் மனோஜ் குமார், 25. கடந்த, 4ம் தேதி வீட்டின் முன், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் திருட்டு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும்
கிடைக்கவில்லை. இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.