/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'
/
பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'
ADDED : ஆக 27, 2025 01:18 AM
தாராபுரம், தாராபுரத்தில் பைக் திருடி தப்பிய இளைஞரை, 2 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வபிரபு, 21; தனது பல்சர் பைக்கை நேற்று முன் தினம் இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தார். அதிகாலை, 3:00 மணியளவில், அடையாளம் தெரியாத வாலிபர் பைக்கை திருடி சென்றார்.
இதுகுறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், உஷாரான தாராபுரம் போலீசார், சோதனைச்சாவடிகளை உஷார் செய்தனர். அதிகாலை, 5:00 மணியளவில் அவிநாசிபாளையம் சோதனை சாவடியில் பைக்குடன் சென்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, வேலங்குப்பத்தை சேர்ந்த அஸ்வின், 19, என்பது தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், களவாணியை கைது செய்து தாராபுரம் சிறையில் அடைத்தனர்.