ADDED : மே 17, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், பைக்குகள் திருட்டு போன புகாரில், களவாணிகளை போலீசார் தேடி வந்தனர். ரங்கம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
ஈரோடு பெரியவலசு ராதா கிருஷ்ணன் இரண்டாவது வீதி கவுதம், 24; காங்கேயம், பரஞ்சேர்வழி ரிஷி, 23, என்பது தெரிந்தது. இருவரும் பைக்குகளை திருடி, அவற்றை பிரித்து எடைக்கு போட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. ஆனாலும் இருவரிடமும் இருந்து நான்கு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்
