தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : மார் 06, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி அருகே, பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.

பவானி அருகே, புன்னம் அங்கமுத்து கொட்டாயை சேர்ந்த ராமதேவன் மகன் பிரகாஷ், 29, கூலி தொழிலாளி. இவர் நேற்று பவானி -ஆப்பக்கூடல் ரோட்டில், ஜம்பை அருகே ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வேகமாக வந்த தனியார் பள்ளி மினி பஸ், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பிரகாஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us