நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று மதியம், 12:00 மணி வரை ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை, மதியம், 1:00 மணிக்கு மேல் மூன்று குழந்தை என ஐந்து குழந்தைகள், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. கடந்த, 2025 ஜன., 1 முதல் டிச.,31 வரை, 2,881 குழந்தைகள் பிறந்தது என்று, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.
சிறுமி பலாத்காரம்கார்பெண்டர் கைது
ஈரோடு: நம்பியூர் இரண்டாவது வடக்கு வீதியை சேர்ந்தவர் மருதாசலம், 45; திருமணம் ஆனவர். கார்பெண்டர். கோபியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார்.
சிறுமி தன் தாயுடன் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் இது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அளித்த புகா-ரின்படி கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து மருதாசலத்தை கைது
செய்தனர்.

