/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் பொது சுத்திகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வேண்டுகோள்
/
சிப்காட் பொது சுத்திகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வேண்டுகோள்
சிப்காட் பொது சுத்திகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வேண்டுகோள்
சிப்காட் பொது சுத்திகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வேண்டுகோள்
ADDED : நவ 06, 2025 01:07 AM
பெருந்துறை, ''ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் சுத்திகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க, தமிழக முதல்வர் முன்வர வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பெருந்துறை வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறும் கெமிக்கலால் நிலத்தடி நீர் கெட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள, 37 கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டாம் என, அரசு போர்டு வைத்துள்ளது. இங்கு நான்கு கிராமங்களின் நிலத்தடி நீரை மாதிரிக்கு கொண்டு வந்துள்ளனர். அதில் 2,500 வரை டிடிஎஸ்., உள்ளது. பொதுவாக, 400 டிடிஎஸ்.,க்கு குறைவான நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். சிப்காட் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும், ஜல்ஜுவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளை அரசு வழங்க வேண்டும்.
சிப்காட்டில் பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க, ரூ.136 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வர், துணை முதல்வர் இருவரும் துவக்கி வைத்துள்ளனர். பணிகள் நடைபெற பூமி பூஜை நடத்தப்பட்டு, ஏழு மாதங்களாகி விட்டது. பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை தமிழக முதல்வர் விரைவுப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இல்லை என்றால் கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும். சேலத்தில், நாளை ( 7ம் தேதி ) ஜவுளி பூங்கா அமைக்க துவக்க விழா நடைபெறுவதாக அறிந்தேன். பெருந்துறை சிப்காட் போல் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படக் கூடாது. ஆகவே, தொழில் வளர்ச்சியை விட, மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ., ஜெயகுமார், மொடக் குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ.
சரஸ்வதி உடன் இருந்தனர்.

