ADDED : அக் 07, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் சட்டசபை தொகுதியில், பா.ஜ., பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட பொது செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மீனாட்சி கோவிந்தசாமி, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் செந்தில்வேல், பூத்களில் உள்ள மக்கள் பிரச்னை குறித்தும், கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில் பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி உள்பட, 150க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.