ADDED : செப் 22, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே தொட்டியபாளையத்தில், பா.ஜ., கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், காங்கேயம் வடக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.