/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க பா.ஜ.,-- எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க பா.ஜ.,-- எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க பா.ஜ.,-- எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க பா.ஜ.,-- எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2025 06:00 AM
ஈரோடு: ''ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்,'' என, மொடக்குறிச்சி பா.ஜ.,-எம்.எல்.ஏ., சரஸ்வதி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மொடக்குறிச்சி பா.ஜ.,- எம்.எல்.ஏ., சரஸ்வதி ஓட்டளித்தார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தேர்தலை புறக்கணித்தாலும், ஜனநாயக கடமையாக ஓட்டளிக்க வந்துள்ளேன். இங்கு இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடக்கிறது. மக்களிடம் இதனால் உற்சாகம் இல்லை. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்க வேண்டும். ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர் இறந்து விட்டால், ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இது குறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில், தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதி காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும், மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.