/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்
/
கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்
ADDED : ஆக 16, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாராபுரம் அருகே, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், துாய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய கோரி, பா.ஜ., சார்பில், மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எம்.பி. திருநகரில், கவுண்டச்சிபுதுார் ஊராட்சிக்கான கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்பார்வையாளர் நவீன்குமார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., முன்னாள் மாவட்ட நிர்வாகி சுரேஷ்குமார் மனு அளித்தார். அதில், ஊராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இரு தொடர்பாக, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.