/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் விவசாயிகள் மாநாடு பா.ஜ., மாநில நிர்வாகி தகவல்
/
ஈரோட்டில் விவசாயிகள் மாநாடு பா.ஜ., மாநில நிர்வாகி தகவல்
ஈரோட்டில் விவசாயிகள் மாநாடு பா.ஜ., மாநில நிர்வாகி தகவல்
ஈரோட்டில் விவசாயிகள் மாநாடு பா.ஜ., மாநில நிர்வாகி தகவல்
ADDED : டிச 09, 2025 10:24 AM

ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே, லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் அடுத்த ஆண்டு ஜன.,4ல் பா.ஜ., விவசாயிகள் பிரிவு சார்பில், மண்டல அளவிலான விவசா-யிகள் மாநாடு நடக்கிறது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் முருகன், ஜல் சக்தி துறை அமைச்சர் பாட்டில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்-ணாமலை பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து நேற்று ஆலோசனை நடத்த வந்த பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோட்டில் மஞ்சள் வாரியம் இல்லை. மஞ்ச-ளுக்கு ஆய்வகம், மஞ்சள் வளர்ச்சிக்கான திட்-டங்கள் இல்லை. தென்னை, குச்சிகிழங்கு விவ-சாயிகள் இங்கு அதிகம் உள்ளனர். புவிசார் குறி-யீடு பெற்ற கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை உள்ளது. எனவே ஈரோட்டை மையப்படுத்தி ஜன.,4ல் விவசாயிகள் மாநாடு நடக்கவுள்ளது. இதில் காங்கேயம் காளை கண்காட்சி, 200 வேளாண் பொருட்களை கொண்ட ஸ்டால்கள் அமைக்கப்படும். இதில், 15 ஆயிரத்துக்கும்
மேற்-பட்ட விவசாயிகள் கலந்து கொள்வர் என எதிர்-பார்க்கிறோம். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் தி.மு.க.,வினர் ஏற்க மறுக்கின்-றனர். மத்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டு வர கூடாது என்கிறது தி.மு.க., அரசு. பின் எவ்-வாறு பொருளாதாரத்தில் நாம் முன்னேற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

