ADDED : பிப் 23, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை: தமிழக பா.ஜ., சார்பாக தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டம் நடந்து வருகிறது. இதன்படி பெருந்துறை தெற்கு மண்டல் பா.ஜ., சார்பாக, பெருந்துறை அடுத்த பட்டக்காரன்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மக்கள் நலன், நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் எதிர்கால மாற்றத்தின் தேவை பற்றிய கருத்துகளை முன் வைத்தும், மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கி, பிரசாரம் மேற்கொண்டனர். பா.ஜ., மட்டுமின்றி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
