ADDED : மே 26, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 165 ரூபாய்க்கும், பனங்கருப்பட்டி, 300 கிலோ வரத்தாகி, கிலோ, 205 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலை உயரவில்லை. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
