/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மப்பில் பணம் கேட்டு மிரட்டல்; முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
/
மப்பில் பணம் கேட்டு மிரட்டல்; முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
மப்பில் பணம் கேட்டு மிரட்டல்; முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
மப்பில் பணம் கேட்டு மிரட்டல்; முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
ADDED : அக் 05, 2024 07:10 AM
பவானி: அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார், 32; அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் முதல் நிலை காவலர். இரண்டு நாட்களுக்கு முன், அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் செக்போஸ்டில் இரவு பணியிலிருந்தார். அப்போது வாழைத்தார் ஏற்றி சென்ற ஒரு வாகன டிரைவரிடம், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் செல்வக்குமார் அப்போது குடிபோதையில் இருந்துள்ளார்.
இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. ஜவஹர், செல்வக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.