ADDED : அக் 04, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி பொறுப்பாளர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தொப்பம்பட்டி மற்றும் நஞ்சியம்பாளையம் பகுதிகளை சேர்ந்த, 14 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமார் தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., கோவை மண்டல நிர்வாகி ரியாஸ்கான், கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், மனோஜ் கூட்டத்தை வழிநடத்தினர். இதேபோல் பொட்டிக்காம்பாளையம், பொன்னாபுரம், கவுண்டச்சிபுதுார் பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் நடந்தது.